நாடப்பாண்டில் இடம்பெறவுள்ள பிரதான பரீட்சைகள் தொடர்பான தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2023ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முதல் 15ம் திகதி வரை இடம்பெறவுள்ளதோடு, 2024ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இதுதவிர, இந்த ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.