நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் விசாரணைகளை நிறைவு செய்து முடிவுகளை வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் தாமதமாகி வருவதனால் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் மற்றும் செயலில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலதாமதங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.