அதிக சூரிய ஒளியுடன் வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண் வைத்திய நிபுணர் வைத்தியர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார்.
அதிக சூரிய ஒளியில் வெளிப்படுவதனால் கண் பார்வை குறைப்பாடு ஏற்படலாம் என கண் சத்திரசிகிச்சை நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார்.
அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல் இருக்க தண்ணீர் அருந்துவதும், புற ஊதா கதிர்கள் கண்களுக்குள் படாமல் இருக்க கண்ணாடி மற்றும் தொப்பி ஆகியவை பயன்படுத்துவதும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.