நுவரெலியா நகரப் பகுதியிலுள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறையில் (31) ஏற்பட்ட தீயினால் சமையலறை முற்றாக எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஹோட்டல் ஒன்றில் தீ பரவியதாகவும், தீப்பரவலுக்கான காரணம் வாயு கசிவு எனவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.