கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட
பல வைத்தியசாலைகளில் இன்று (26) வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கமைவாக அக்கரைப்பற்று, பனங்காடு பிரதேச வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அவசர சேவை சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அதுமட்டுமன்றி வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
அண்மையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் மாணவனொருவன் மரணித்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற மக்களது ஆர்ப்பாட்டம் மற்றும் வைத்தியசாலையின் உடைமைகள் சில சேதமாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளப்படுத்தப்பட்டும் பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதை தெரிவித்தும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.