கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஸ்மார்ட் கால அட்டவணை காட்சி சேவை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் ரயில் நிலையத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள இரண்டு பிரதான திரைகள் மற்றும் 7 திரைகள் மூலம் ரயில் நேரங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும் அவை ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பயணிகளுக்கும் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் அருகே உள்ள பயணிகளுக்கும் தெரியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே பொது மேலாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார, பிரதிப் பொது முகாமையாளர்கள் ஊடகத்துறை தலைவர் கமிந்த மளவியாராச்சி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.