இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்
மிசுகோஷி ஹிடேகி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் .அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று 19 ஆம் திகதி காலை வெள்ளவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.இச்சந்திப்பில் ஜப்பானிய தூதரகத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கோட்டாரோ மற்றும் இரண்டாவது செயலாளர் இமாய் கௌரி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார, அரசியல் நிலவரங்கள் குறித்து இரு தரப்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு குறித்தும் ஜப்பானிய இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் தயாராக இருப்பதை ஜப்பானிய பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.