ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ், வாழ்வாதாரம் என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபட்டு, நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜன சவியவின் அடுத்த கட்டமாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதன் மூலம் குடும்பம் சார்ந்த குடும்பத்தின் நுகர்வு, முதலீடு, சேமிப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைக்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.