இந்த நாடு இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி சொந்த பிரஜைகளுக்கே சொந்தம் என்றும், எந்த ஒரு தலைவருக்கும் சுதந்திரப் பத்திரம் எழுதிக் கொடுக்கவில்லை என்றும், அரசியல்வாதிகளே இந்த நாட்டின் தற்காலிகக் காவலர்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கட்சிகளின் உரிமைகள் தகப்பனிடமிருந்து மகனுக்கும் பின்னர் பேரனுக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதைச் செய்ய முடியும் என்றாலும், நாட்டின் உரிமைகள் 220 இலட்சம் மக்களுக்கு சொந்தமானது, அது அனைத்து மதத்திற்கும் தேசத்திற்கும் மத ஒற்றுமைக்கும் சொந்தமானது. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையும் உருவாக்க வேண்டும். வேறுபாடுகளை உருவாக்கி முன்னோக்கி செல்ல முடியாது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வன்னி மாவட்டம், வவுனியா, நடுங்கேணி ̈ மடு தமிழ் மகா வித்தியாலயத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சக்வல சுஹுறு வகுப்பறைகள் நிகழ்ச்சியின் 136ஆவது கட்ட நிகழ்வின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (28) தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலையின் நடனக் குழுவிற்கு ஆடைகளை பெற்றுக் கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபா நிதியையும் சஜித் பிரேமதாச வழங்கினார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான இணைய வழி அணுகுமுறைக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (28) அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, Internet Watch Foundation மற்றும் Save the Children & Child நிதியங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் இணையத் தளத்தில் பதிவிடப்படும் பாதிப்புகுரிய உள்ளீடுகளை உடனடியாக நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.