காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கிடையிலான போர் இன்று (26) 172ஆவது நாளாகவும் நடைபெற்றுவருகிறது.
காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரை 32,333இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டது.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானையொட்டி, காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீா்மானம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நேற்று (25) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
15 உறுப்பு நாடுகளைக் கொண்ட சபையில் தீா்மானத்துக்கு ஆதரவாக அனைத்து நாடுகளும் வாக்களித்தன.
அதையடுத்து, அந்தத் தீா்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.