சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட மோதலில் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மொனராகலையில் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேச பௌத்த பிக்கு மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட துப்பாக்கிதாரியே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டார்.
குறித்த நபர் அத்தனகல்ல, யதவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்க அழைத்து செல்லும் போது தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதன்போது ஏற்பட்ட மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.