மாளிகாவத்தை - அபேசிங்கராம பகுதியில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக கூறப்படும் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் புத்தல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரும் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவருமாவார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.