ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
பெசில் ராஜபக்ஷ கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.