இலங்கையிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 8 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தவரை திருச்சி மத்திய நுண்ணறிவுப் பிரிவினர் பாம்பனில் வைத்து கைது செய்தனர்.
தேடப்பட்டு வந்த நபரான வெள்ளையன் என்ற பிரசாந்தின் நடமாட்டத்தை செல்போன் சிக்னல் மூலமாக கண்டறிந்த நுண்ணறிவுப் பிரிவினர், அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.