அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சரக்கு கப்பல் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
Dali என்ற சரக்கு கப்பல் மோதியதில் 1.6 மைல் நீளமுள்ள பாலம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது.
பாலம் இடிந்து வீழ்ந்ததில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்படாத போதிலும், விபத்தினால் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல வாகனங்கள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், மீட்புக் குழுக்கள் காணாமல் போனோரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது