இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.
எனினும் ஊசி மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22 ஆம் திகதி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.