Our Feeds


Sunday, March 17, 2024

SHAHNI RAMEES

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் – விண்ணப்ப கால எல்லை நீடிப்பு..!



பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளான சிறார்களுக்கு கல்வியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25″க்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தரம் 1 முதல் தரம் 11 வரையான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின் அடிப்படையில் இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


www.facebook.com/president.fund என்ற இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »