இந்திய மாநிலமான பிகாரின் சுபா மாகாணத்தில் இன்று(22) காலை கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்த விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர்.
மேலும், 30 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிகாரின் சுபாலில் கோசி ஆற்றின் மீது 984 கோடி இந்திய ரூபா செலவில் பாலம் கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.