Our Feeds


Wednesday, March 6, 2024

News Editor

காற்றின் தரம் அதிகரிப்பு


 காற்றின் தரக் குறியீட்டின்படி, நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த சுட்டியின்படி கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 165 ஆகவும் திருகோணமலை மாவட்டத்தில் 159 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், காலியில் காற்றின் தரக் குறியீட்டின் பெறுமதி 158 ஆக பதிவாகியுள்ளது.

காற்றின் தரக் குறியீடு 150 முதல் 200 வரை இருந்தால், அது ஆபத்தான நிலை என்றும், 100 முதல் 150 வரை இருந்தால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவதான மட்டத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »