Our Feeds


Thursday, March 14, 2024

SHAHNI RAMEES

சீன அரசினால் சிறப்பு வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகள் அன்பளிப்பு...

 



சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு

அமைச்சுக்கு விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


 


 அதன்படி அன்பளிப்பாக வழங்கப்பட்ட விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்களை இலங்கை இராணுவத்தினர் நேற்று 13 ஆம் திகதி சீன மக்கள் குடியரசின் தூதுவர் கியூ சென்கொங், இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர்.


 


உபகரணங்களை வழங்குவது தொடர்பான ஆவணங்களில் முறையான கையொப்பமிடுதல் நிகழ்வு கியூ சென்கொங் மற்றும் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையே நடைபெற்றது


 


பதினெட்டு REOD 4000 வெடிகுண்டு அகற்றும் நடுத்தர ரோபோக்கள், பதினெட்டு REOD 400 வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் ரோபோக்கள், 10 வெடி எதிர்ப்பு போர்வைகள், 10 வெடி பாதுகாப்பு தாங்கிகள் மற்றும் வாகனங்கள் அடையாளமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டவை இராணுவத் தளபதியுடம் அதிகாரபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »