சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர், 08 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.