ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இது, எதிர்வரும் 20ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிரகாமர் சர்வதேச மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 40 சிவில் அமைப்புகள் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசியத் தேர்தலில் ‘மனிதநேய மக்கள் கூட்டணி’யின் தலைவர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.