உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.