ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, விரைவில் வடமாகாணத்துக்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு செல்லும் அவர், அங்கு கூட்டுறவு மண்டபத்தில் மக்களை சந்திக்கவுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திப்பார்.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதோடு அங்கும் பல்வேறு தரப்பினருடன் உரையாடவுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி அனுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்யவுள்ளார். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் சந்திப்பில் பங்கேற்பதுடன், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை அதன்போது சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.