எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்து அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.
இதனால், ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும் எனவும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் தற்போதுள்ள அரசாங்கம் சட்டபூர்வமானதாக அமையாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.