துருக்கியின் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நடைபெறும் என ஜனாதிபதி தையிப் ஏடகன் (Tayyip Erdogan) தெரிவித்துள்ளார்.
இதேவே தமது கடைசித் தேர்தல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை அரச ஊடகம் தெரிவித்துள்ளது. துருக்கியின் மிகவும் முக்கியமான அரசியல்வாதியாக தையிப் அர்துகான் காணப்படுகின்றார்.
கடந்த 2002 இலிருந்து சுமார் இரண்டு தசாப்தங்களாக வெற்றிகரமான ஆட்சியாளராக காணப்படுகின்றார்.
இந்த காலப்பகுதியில் பல்வேறு தேர்தல்களில் இவரது கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை கடந்த 2023ம் ஆண்டு ஐந்து வருட பதவிக் காலத்திற்காக இவர் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார்.
இந்த நிலையில் நடைபெறவுள்ள தேர்தல் தமக்கு கடைசியானது எனவும், சட்டத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை நாட்டைக் கட்டியேழுப்பும் வகையில் புதிய சகோதரர்கள் ஆட்சிப் பீடம் ஏறுவார்கள் எனவும் தையிப் அர்துகான் சுட்டிக்காட்டியுள்ளார்.