சிறையில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்லவின் விருப்பத்திற்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான இறுதி வாக்கெடுப்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் சார்ஜன்ட் குஷான் ஜயரத்ன சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகரின் பணிப்புரையின் பேரில் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.