பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீட்டிக்க
இந்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த டிசம்பரில், பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது, அடுத்த ஆண்டு 31ம் திகதியுடன் தடை முடிவடைய இருந்தது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சந்தையில் அதிகளவு வெங்காயத்தை இருப்பு வைத்திருக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிக்கப்பட்டதன் காரணமாக இலங்கையில் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்பவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.