குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மாதம்பேயில் இருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதனையடுத்து, குருநாகல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.