Our Feeds


Saturday, March 16, 2024

ShortNews Admin

”பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” - யாழ்பாணத்தில் பரபரப்பான மிதவை - நடந்தது என்ன?



யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று மிதந்து வந்து கரையொதுங்கிய நிலையில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.


”பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” போன்ற வாசகங்கள் மிதவையில் எழுதப்பட்டுள்ளது.


குறித்த மிதவையை பார்வையிட அதிகளவான மக்கள் அப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும், உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.


இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »