ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு புதிதாக 20 வலயக் கல்வி அலுவலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இதனைத் தெரிவித்தார்.
குறிப்பாக, கல்வியில் திறமை காட்டினாலும், கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழக்க, குடும்ப வருமானம் இன்மை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.