தமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இன்று (05) காலை நாடு திரும்பிய நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை தாம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நம்புவதாக தெரிவித்த பசில் ராஜபக்ஷ, ஒவ்வொரு தேர்தலும் சவாலாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், ''நாங்கள் மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்கள் சொல்வதைச் செய்கிறோம். சில இடங்களில் தவறு செய்கிறோம். மக்கள் நாங்கள் சொல்வதை ஏற்க மாட்டார்கள். சில சமயங்களில் மக்கள் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை. அவற்றை நாங்கள் திருத்துகிறோம்." என குறிப்பிட்டார்.