தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை அரசு நீக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.
தொடக்கப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அரசு மதிய உணவு வழங்குவது வெட்கக்கேடானது என்றார்.
தமது அரசாங்கத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து நாற்பத்தொரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.