ஜனாதிபதி வேட்பாளராக கோரினால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் தமக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தான் இணக்கமான நிலையில் உள்ளேன்.
மேலும், கடந்த 20ஆம் திகதி தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என்னும் புதிய அரசியல் கூட்டணி ஆரம்பமானது.
எனக்கு எந்த கட்சியுடனும், சமூகத்துடனும் விரோதம் இல்லை. நான் எல்லோரையும் நேசிக்கும் நபர். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் நிச்சயமாக போட்டியிடுவதுடன் தேர்தலில் வெற்றியும் பெறுவேன்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.