Our Feeds


Tuesday, March 5, 2024

News Editor

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு


 அரச பாடசாலைகளில் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இலங்கையில் 100 கல்வி வலயங்களைச் சேர்ந்த 7,902 பாடசாலைகளில் பாடசாலை உணவுத் திட்டம்' அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

இத்திட்டம் பாடசாலை மாணவர் சமூகத்தின் மொத்தம் 1.08 மில்லியன் மாணவர்களை உள்ளடக்குவதாகவும் இதற்காக ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு உணவுக்காக ரூ. 85/- செலவிடப்படுகிறது. 

ஆனால், இது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவானது அண்ணளவாக விலை ஏற்ற இறக்கத்தின் விளைவாக ஒரு உணவுக்கு குறைந்தபட்சம் ரூ. 110/-செலவிடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது. 

மேலும், பாடசாலை உணவுத் திட்டத்தின்' கீழ் 2024 ஆம் ஆண்டிற்கான தெரிவு செய்யப்பட்ட 917 பாடசாலைகளில் 200,000 மாணவர்களுக்கு 03 உணவு வகைகளை வழங்க சேவ் த சில்ட்ரன் அமைப்பு இணங்கியுள்ளது. 

இதன்படி, ஒரு மாணவரின் உணவுக்காக செலவிடப்படும் தொகையை 110/- ரூபாயாக அதிகரிக்க கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆரம்பப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்குள் 170 நாட்களுக்கு பாடசாலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »