பசில் ராஜபக்ஷ முன்வைக்கும் யோசனைகள் நல்ல
யோசனைகளாகவே இருக்கும் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதியை வழிபட வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
“.. நாம் எந்தவொரு தேர்தலுக்கு ஆயத்தமாகவே இருக்கிறோம். நல்ல யோசனையே பசில் ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.
முன்னர் பொது தேர்தலை வைத்து விட்டு பின்னர் ஜனாதிபதி தேர்தலை வைப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தினால், வெற்றி பெரும் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொது தேர்தலில் பாரிய வெற்றி இருக்கும். அது நியாயமானதல்ல. நியாயமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் பொது தேர்தலை நடத்த வேண்டும்..”