அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கு நபர்களை நியமிக்கும் போதும், அந்த நிறுவனங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான பங்குகளை தனியாருக்கு வழங்கும் போதும் துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவற்றை வழங்குவதை தடுக்கும் சட்டவிதிகள் அடங்கிய சட்டமூல வரைவு விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் அவற்றை நடத்தி செல்வது சம்பந்தமான ஏற்பாடுகள் அடங்கிய சட்டமூல வரைவு அமைச்சரவையின் அனுமதிக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது.
அந்த சட்டமூல வரைவு தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது சம்பந்தமாக பகிரப்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் இந்த சட்டமூல வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது.
அரச நிறுவனங்கள் தொடர்பில் துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயற்படும் சந்தர்ப்பத்தை தடுப்பது இதன் அடிப்படை நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூல வரைவு நிறைவேற்றப்பட்ட பின்னர், துறைக்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு தேவையான விதத்தில் அமைச்சரவை பத்திரங்களை தாக்கல் செய்து, அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதும் இதன் மூலம் தடுக்கப்படும் என கூறப்படுகிறது.