எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவாலை எதிர்கொள்ளும் மாணவிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
பின்தங்கிய கிராமங்கள், மிகவும் பின்தங்கிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் எட்டு லட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தற்போது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ஒரு பில்லியன் ரூபா எனவும் ஒரு வவுச்சர் அட்டை ஒன்றின் பெறுமதி சுமார் 1200 ரூபா எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.