Our Feeds


Monday, March 4, 2024

ShortNews Admin

தேர்தலில் தீவிரமாக களமிறங்கிய ரணில் - அரசியல் அமைச்சரவை அமைக்கப்பட்டது.



இலங்கையில் இந்த வருடம் இடம்பெறவுள்ள தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.


கடந்த திங்கட்கிழமை முதன்முறையாக கூடிய அரசியல் அமைச்சரவையில், எதிர்வரும் தேர்தலுக்கு எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.


அதேவேளை, இந்தக் குழு ஒவ்வொரு வாரமும் கூட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


குறித்த குழுவில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நிமல் லான்சா, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »