AT பவுண்டேஷன் அமைப்பினால் நடத்தப்பட்ட கல்விக்கு கரம் கொடுத்தவர்களை கௌரவிக்கும் வருடாந்த கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ள முடியாமல் போன மௌலவி யூசுப் முப்தி அவர்களை, AT பவுண்டேஷன் குழுவினர் முப்தி அவர்களின் அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து விருது வழங்கி கௌரவித்தனர்.
இவ்வருடம் கொழும்பு கைரிய்யா கல்லூரி அதிபர் திருமதி. நஸீரா ஹஸனார், பாத்திமா மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. மும்தாஜ் பேகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
யூசுப் முப்தி அவர்கள் “ஸம் ஸம் பவுண்டேஷன்” மூலமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான கல்வி உதவிகளை பாரியளவில் செய்து வருவதுடன், அரச மற்றும் தனியார் துறை சார்ந்தவர்களுக்கான வதிவிட பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் என பலவிதமான செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருவதை பாராட்டியே குறித்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.