யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்களின் ஒரு தொகுதி காணிகள் நாளை (10 ) விடுவிக்கப்படவுள்ளன.
அதன்படி , காங்கேசன்துறை மத்தி, தெற்கு - 234, 235 கிராம சேவையாளர் பிரிவுகளில் 20.3 ஏக்கர் காணி,வறுத்தலைவிளான் 241 கிராம சேவையாளர் பிரிவில் 23 ஏக்கர் காணி, மயிலிட்டி தெற்கு 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணியும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த கிராம சேவையாளர் பிரிவில் காணி உரிமையாளர்களுக்கு கிராம சேவையாளர், பிரதேச செயலரால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அனைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு காலை 10 மணிக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.