அடுத்த வருடமும் தற்போதைய அரசாங்கம் அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் கிராமத்திற்கு செல்லாவிட்டால் அரசாங்கம் காணாமல் போய்விடும் என தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்திக்காக வழங்கப்படும் பணத்தை கிராமத்திற்கு எடுத்துச் சென்று கிராமத்தின் அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கம்பஹா மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கம்பஹா மாவட்ட பொஹட்டுவ மாவட்ட தலைவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கலந்துகொண்டனர்.