நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் (15) உணரக்கூடிய
அளவில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி, வடமேல், வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இயலுமான அளவு நிழலுடன் கூடிய இடங்களில் இருக்குமாறும், அதிகளவான நீரை அருந்துமாறும் பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், வீடுகளிலுள்ள வயோதிபர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், குழந்தைகளை வாகனங்களில் தனிமையில் விட்டு செல்வதை தவிர்க்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.