18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை தனது தாய் மற்றும் மூத்த சகோதரரிடம் காட்டிவிட்டு வீடு திரும்பும் போது வேன் மற்றும் கெப் ரக வாகனதுடன் மோதியதில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொட்டாவ ஹெனாவத்தையைச் சேர்ந்த மஹாலியனகே சஹான் திமந்த பெரேரா என்ற 18 வயதுடைய பாடசாலை மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் போட்டிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்ய வேண்டுமென எதிர்பார்த்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தாய் மற்றும் மூத்த சகோதரியிடம் மோட்டார் சைக்கிளை காட்டிவிட்டு அதை தன் நண்பனிடம் ஒப்படைக்க சென்று கொண்டிருந்த போதே கொட்டாவ ஹைலெவல் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.