தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்று (20) மாலை கனடா சென்றுள்ளார்.
கனடாவில் வாழும் இலங்கையர்களிடம் உரையாற்றும் பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அவர் கனடா விஜயமாகியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கனேடிய கமிட்டியின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு கனடாவின் தலைநகர் டொரண்டோவில் நடைபெற உள்ளது.
மேலும், 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரில் மற்றுமொரு பேரணி நடைபெறவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.