கோப் குழுவின் தலைவராக ரோஹித்த அபேகுணவர்தனவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் அவர்கள் இன்னும் பாடம் கற்கவில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோப் குழுவின் தலைவர் நியமனம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் பேசி வந்தோம்.எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்சூ கூறினோம்.
எனினும் அது நடக்கவில்லை. அரசாங்கம் மீண்டும் கோப் குழுவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. எமக்கு வருத்தமும் உள்ளது.
கோப் குழுவின் தலைவர் பதவியில் புத்திசாலிகள், நன்றாக படித்தவர்களே இருந்து வந்தனர். பொதுஜன பெரமுன இன்னும் பாடம் கற்கவில்லை என்ற எனக்கு தெரிகிறது. நாம் விரும்பியவர்களை நியமித்தால் வேலை சரியாக நடக்கும் என்று நினைக்கின்றனர். அப்படி செய்யட்டும் இன்னும் சிறிது காலமே இருக்கின்றது.
இன்னும் 5 மாதங்களுக்கு அப்படி செல்லட்டும். பொதுஜன பெரமுனவினர் அடிவாங்கியும் பாடம் கற்கவில்லை.
இந்த அரசியல் தவறு என்று கூறி மக்கள் விதியில் இறங்கி ஜனாதிபதியை விரட்டியடித்த பின்னரும் தமக்கு இன்னும் அதிகாரமும் பலமும் இருக்கின்றது என்று பொதுஜன பெரமுனவினர் நினைக்கின்றனர்.
இன்னும் சிறிது காலத்தில் நல்ல, நல்ல விளையாட்டுக்களை பார்க்க முடியும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.