Our Feeds


Wednesday, March 20, 2024

SHAHNI RAMEES

வெளிநாட்டில் உள்ள எம்.பிக்களை உடன் நாடு திரும்புமாறு அறிவிப்பு

 



வெளிநாட்டில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேரை

நாளை 21 ஆம் திகதி காலைக்குள் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அலுவலக பிரதம செயலாளருக்கு அறிவித்துள்ளார்.




சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமையே இதற்குக் காரணமாகும்.




அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேர் இதில் அடங்குகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »