கடவத்தை பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்
அலுவலகம் மீது இன்று (26) கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கட்சி அலுவலகத்தின் மீது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றே வீசப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல் காரணமாக இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கட்சி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கைக்குண்டு ஒன்றும், கட்சி அலுவலகத்திற்குள் கைக்குண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டாலும், குண்டு வெடிக்காததால், நடக்கவிருந்த அழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்சி அலுவலகம் மீது சிலர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை அதிகாரிகள் குழுவொன்று தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுப்பிட்டிய ஏ.ஜே.பி.கிரிஷாந்தவின் பணிப்புரையின் பிரகாரம் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.