நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதியை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
நெல் விநியோக சபைக்கு இந்த நிதியை வழங்க அவர் தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில், இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் இரு நெற்களஞ்சியசாலைகளிலிருந்து நெல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவிற்காக 2 பில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் வழங்கப்படவில்லையென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தொடர்புபட்டதாகவும் இதற்கமைவாகவே 50 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்ய தீர்மானித்ததாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார். (