இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில் நீதி செத்து விட்டதென்று மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தியவர்கள். எல்லாப் பிரச்சினைக்கும் சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றவர்கள், தமது உட்கட்சி விவகாரத்திற்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அது தீர்ந்துவிடக்கூடாதென்று சர்வதேச நீதிமன்றத்திக்கும் போவோம் என்பார்கள், தமது பிரச்சினை என்றவுடன் அதை இலகுவாக தீர்க்கும் விருப்பத்தோடு இலங்கை நீதி மன்றத்தை நாடியுள்ளனர். இதிலிருந்து இவர்களது அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்து விட்டது" என்று சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.